[ புதன்கிழமை, 04 ஏப்ரல் 2012, 03:11.52 AM GMT ]
இராணுவத்தினர் வசமுள்ள வலிகாமம் வடக்கு பகுதியை விடுவிக்கக் கோரி அப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவதற்கு தயாராகி வருகின்றனர் எனத் தெரியவருகின்றது.பலாலி, மயிலிட்டி, ஊரணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பேராட்டத்திற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இவர்கள் தமது பகுதிகளை விடுவிக்ககோரி யாழ்.அரச அதிபரிடம் மகஜர் ஒன்றையும் ஏற்கனவே கையளித்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் எதிர்வரும் நாட்களில் பேராட்டம் நடாத்தலாம் என தெரியவருகின்றது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நாம் எமது பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து பல வருடங்களாகின்றன. எமது இடங்களில் இராணுவத்தினர் உள்ளனர்.
ஆனால், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டும், சொந்த இடத்திற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளோம். இப்போது நாங்கள் தங்கியுள்ள நண்பர்களின் உறவினர்களின் வீடுகளில் நாம் எதிர்வரும் நாட்களில் தங்கியிருக்க முடியாது.
எனவே மிகவிரைவாக எமது பகுதிகளுக்கு செல்ல எமக்கு அனுமதிக்க வேண்டும். இழப்பதற்கு உயிரைத்தவிர எம்மிடம் இனி ஒன்றுமில்லை என்றார்.
நன்றி தமிழ்வின்.கொம்