அண்மையில் ஊறணி இறங்குதுறைக்கு அருகில் உள்ள கடற்கரைப்பகுதி மற்றும் அதனுடன் கூடிய 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தது. ஆனால் குறித்த பகுதியில் தாம் தொழில் செய்ய முடியாது என்றும் தமது இறங்குதுறை மற்றும் அதனை அண்டிய நிலங்களை விடுவித்தால் மாத்திரமே தாம் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியும் எனவும் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இது தொடர்பினில் அப்பகுதிகளை விரைவில் விடுவிக்க வேண்டும் என இராணுவத்திடம் கோரிக்கை விடுத்த வேளை இதனை கடற்படையே தீர்மானிக்கவேண்டுமென தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க ஆனால் கடற்படை ஒத்துழைக்கமறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
- பதிவு.கொம்