யாழ்.மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன் தலைமையிலான குழுவினர் இன்று சனிக்கிழமை அப்பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.
எதிர்வரும் 07ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலகத்துக்கு அதற்கான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கப்படவுள்ளது என்றும் தெரியவருகிறது. வலி.வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த 6ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பகுதியில் ஆயிரம் ஏக்கர் கடந்த 20 ஆம் திகதிக்கு முன்னதாக விடுவிப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்ட போதும் சுமார் 400 ஏக்கர் நிலப் பகுதியே கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதியினால் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: உதயன்.கொம் செய்திகள்