கடந்த மாதம் வலி,கிழக்கில் வளலாய் மற்றும் வசாவிளான் பகுதிகளில் மக்களுடைய ஒருபகுதி நிலங்கள் விடுவிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நாளைய தினம் காலை 8மணிக்கு, மக்கள் தங்களுடைய நிலங்களை அடையாளப்படுத்துவதற்காக மேற்படி பகுதிகளுக்கு வருகை தரலாம் என தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேச செயலகங்கள் ஊடாக யாழ்.மாவட்டச் செயலகம் இந்த அறிவிப்பினை விடுத்திருக்கின்றது.
இதன்படி, வலி.வடக்கில் மயிலிட்டி வடக்கு(ஜே-246), தையிட்டி தெற்கு(ஜே-250), வீமன்காமம் வடக்கு(ஜே-236), வீமன்காமம் தெற்கு(ஜே-237), காங்கேசன்துறை தெற்கு(ஜே-235), மயிலணி-(ஜே-240), கட்டுவன்-(ஜே-238), வறுத்தலைவிளான்- (ஜே-241) ஆகிய எட்டுக் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக சுமார் 570 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படவுள்ளது.
எனவே வறுத்தலைவிளான் பிரிவுக்கு செல்லும் மக்கள் தமது காணிகளை பார்வையிட தெல்லிப்பழை வைத்தியசாலை வீதி வழியாகவும், பலாலி தெற்கு கிராம அலுவலர் பிரிவுக்கு செல்லும் மக்கள் தமது காணிகளை பார்வையிட அச்சுவேலி தம்பாட்டி வழியாகவும் ஏனைய கிராம அலுவலர் பிரிவுகளுக்கு செல்லும் மக்கள் தெல்லிப்பழை, வீமன்காமம் புகையிரத வீதிவழியாகவும் சென்று தமது காணிகளை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் பகுதியில் மீளக்குடியேறும் மக்கள் தங்களுடைய காணிகளை பார்வையிட்டு உறுதிப்படுத்திய பின்னர் அந்தந்தப் பிரிவு கிராம அலுவலர்களிடம் தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலத்திற்குச் சொந்தமான மக்கள் உடனடியாக மீள்குடியேற்றத்திற்கு தங்கள் பதிவுகளை கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் மேற்கொள்ளுமாறும் கேட்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை வலி,கிழக்கு பிரதேச செயலர் எல்லைக்குட்பட்ட வளலாய் பகுதியில் இன்னமும் 400 ஏக்கர் நிலம் மக்களிடம் கையளிக்கப்படவேண்டியிருக்கின்றது.
இந்த நிலத்திற்குச் சொந்தமான மக்கள் உடனடியாக மீள்குடியேற்றத்திற்கு தங்கள் பதிவுகளை கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் மேற்கொள்ளுமாறும் கேட்கப்பட்டிருக்கின்றது.
நாளைய தினம் வளலாய் பகுதியில் சுமார் 110 ஏக்கர் வரையிலான நிலம் விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தமிழ்வின்.கொம்