தமது வீடுகள் அழிக்கப்படுவதை நிறுத்துமாறும் தம்மை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறும் வலியுறுத்தி இந்த மக்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர் .
யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்தப் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது .
எதிர்வரும் 16 ம் திகதி வரை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நன்றி: தமிழ்வின்.கொம்
வலி.வடக்கு மக்களின் போராட்டத்திற்கு முதலமைச்சர் ஆதரவு!
உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று வடக்கு முதலமைச்சர் கலந்து கொண்டதுடன் மக்களுடனும் கலந்துரையாடி எதிர்காலத்தில் இராணுவ வெளியேற்றம், உயர்பாதுகாப்பு வலையம் இல்லாது செய்தல், மீள்குடியேற்றம் என்பவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
போராட்டத்திற்கு ஆதரவினையும் தெரிவித்துக் கொண்டார். இதேவேளை, சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு தற்போதைய வடக்கு நிலமைகள் குறித்து தெளிவு படுத்தியதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் குறித்தும் தெளிவு படுத்தினார்!
நன்றி: உதயன்.கொம்