இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் பயிலும் எமது மயிலிட்டி மண்ணின் மகள் அருணகிரிநாதன் தாட்சாயினி 172 மதிப்பெண்ணை பெற்று மாவட்ட ரீதியில் 617 வது இடத்தினையும் தனதாக்கி, பாடசாலைக்கும் எமது மயிலிட்டி மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார். மயிலிட்டிக்குப் பெருமை சேர்த்த அருணகிரிநாதன் தாட்சாயினி அவர்களின் கல்விப் பயணம் மேலும் மேலும் சிறக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.