முதலாவது இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு எதுவும் காணப்படாது என ஜனாதிபதி அறிவித்திருந்தார். யுத்தத்திற்கு பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட பல வீடியோக்கள் மூலம் யுத்தகுற்றங்கள் இடம்பெற்றது உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இரண்டு அறிக்கைகளும் தமிழ் சமூகத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளதுடன் பழைய காயங்களை மீண்டும் கிளறியுள்ளன.
இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து 7 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் உள்நாட்டு போரின் போது நடைபெற்ற குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை மட்டுமே நடத்தப்படும் என்றும் உலக நாடுகள் இதில் தலையிடக்கூடாது என்றும் இலங்கை ஜனாதிபதி சிறீசேனா தெரிவித்துள்ளார்.
அதே போல் யாழில் விழா ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் போரின் போது காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இவை இரண்டும் தமிழர்களிடையே ஆத்திரத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
போர் முடிந்து 7 ஆண்டுகள் ஆன நிலையில் போரின் போது நடைபெற்ற குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது தமிழர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தமிழர்களுக்கு சொந்தமான பல்வேறு ஏக்கர் கணக்கான நிலங்கள் இன்னும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
நாட்டில் இரண்டாவது பெரிய துறைமுகமான மயிலிட்டி துறைமுகம் இப்போதும் ராணுவத்தின் பிடியில் தான் உள்ளது.
மேலும் அங்குள்ள குடிசை வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள தமிழர்கள் மீன் பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள அகதிகள் குடியிருப்பில் ஒரு கழிவறையை 15 குடும்பங்கள் வரை பயன்படுத்தும் நிலையில் தான் மக்கள் வசித்து வருகின்றனர்.
பிரித்தானியா பிரதமர் டேவிட் கமெரூன் வருகையின் போது முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் இன்னமும் அங்கேயே தான் உள்ளனர். கமெரூனின் கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படாமல் அடைப்படை வசதிகள் இல்லாமல் சுமார் 1700 மக்கள் வரை அங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழர்களின் சேதமடைந்த பொருட்களின் மிச்சம் இன்னும் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்படாமலேயே உள்ளது என சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது.
நன்றி: லங்காநாதம்.கொம்