மயிலிட்டி மக்களின் காணிகள் விடுவிக்கக்கூடாது அங்கு இராணுவத்தினரின் ஆயுதக் களஞ்சியம் அங்கு உள்ளது என தேசிய போர் வீரர்கள் முன்னணி அமைப்பு 2016 இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியிருந்தது. எனினும் இதனை ஜனாதிபதி மறுத்ததுடன் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
மயிலிட்டி வடக்கில் உள்ள இராணுவ இருப்புக்கள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகின்றது....16/4/2018
வலிகாமம் வடக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் மயிலிட்டி வடக்கில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ ஆயுத கிடங்கு மற்றும் அதனுடன் இணைந்த கட்டடங்கள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுவதுடன், அங்குபொருத்தப்பட்ட கூரையின் இரும்புக் கேடர்களை இராணுவத்தினர் வாகனங்களில் எடுத்துச்செல்கின்றனர். அத்துடன் ஆயுதக் கிடங்கினை சுற்றிவர உயரமாக அமைக்கப்பட்டிருந்த மண் அணைகளும் அகற்றப்படுகின்றது.
மேலும் சிறு வெடிபொருட்களின் வெற்றுப் போத்தல்கள் பெருமளவில் உரைப்பையினுள் வைத்திருந்தனர் இவைகளும் அங்கிருந்து அகற்றப்பட்டு வருகிறது.
மயிலிட்டி மக்களின் காணிகள் விடுவிக்கக்கூடாது அங்கு இராணுவத்தினரின் ஆயுதக் களஞ்சியம் அங்கு உள்ளது என தேசிய போர் வீரர்கள் முன்னணி அமைப்பு 2016 இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியிருந்தது. எனினும் இதனை ஜனாதிபதி மறுத்ததுடன் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி, படங்கள்: நிருஜன் செல்வநாயகம்
0 Comments
Leave a Reply. |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|