இதில் தற்போதைய துறைமுகத்தை ஆழப்படுத்தல், 80 மீற்றர் நீளமாக துறைமுக மேடை , வலை தயாரிக்கும் மண்டபம், எரிபொருள் வழங்கும் நிலையம், கண்காணிப்பாளர் அலுவலகம், மீனவ சங்கக் கட்டடம், மலசலகூட வசதிகள், நீர் மற்றும் மின்சார வசதி என்பன ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நிகழ்வின் இறுதியில் வலி.வடக்கு மீள்குடியேற்ற சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் அவர்களால் பிரதமருக்கு நினைவுப் பரிசிலும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கமத்தொழில் கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசானம் மற்றும் கடற்றொழில் நீரியல்வளங்கல் அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரீசன், கடற்றொழில் நீரியல்வளங்கல்
இராஜாங்க அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலீப்வெத ஆராச்சி , கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், யாழ். மாநகரசபை முதல்வர், யாழ்.மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன், பிரதமரின் செயலாளர் சிவஞானசோதி, மாநகர சபை முதல்வர், வலிகாமம் வடக்கு பிரதேச சபை செயலாளர் ச.சிவசிறி, வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன், தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் திரு.வீ.சிவஞானசோதி, அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
விரைவில் இரண்டாம் கட்டமாக தற்போது இருக்கின்ற துறைமுகத்தை மேலும் அபிவிருத்தி செய்தல், ஐஸ் களஞ்சியசாலை மீன் ஏல விற்பனை நிலையம், கழிவு நீர் மற்றும் கழிவு பொருட்களை அகற்றும் முகாமைத்துவ கட்டடம், நிர்வாகக் கட்டடம், மின் பிறப்பாக்கிகள், கதிரியக்க கட்டுப்பாட்டுப் பிரிவு, சிற்றுண்டிச்சாலை, அலுவலகர் தங்குமிட வசதி மற்றும் உள்ளக வீதி புனரமைப்பு ஆகிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன.