இதேவேளை கட்டுவன் மயிலிட்டி வீதியில் மேலும் 3 பாலங்கள் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. மயிலிட்டி சந்திக்கு அண்மையுள்ள பாலங்கள், மற்றும் கட்டுவன் கிராமக்கோட்டு சந்திக்கு அருகில் சேதமடைந்துள்ள பாலம் என்பன புனரமைப்பு செய்யப்படவுள்ளது.
அத்துடன் அங்கஜன் இராமநாதனின் கோரிக்கையில் மயிலிட்டி சந்தியில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையம் வரையான வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துள்ளன. இது காப்பெட் வீதியாக புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.
இங்கு மீள்குடியேற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன் மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் வலியுத்தப்பட்டு வருகின்றன. மக்களது காணிகள் விடுவிக்கப்படவேண்டும். நானும் வலி.வடக்கை சேர்ந்தவன். இந்த கட்டுவன்-மயிலிட்டி வீதியில் உள்ள 400 மீற்றர் வீதி கட்டாயம் விடுவிக்க வேண்டும். இதுதொடர்பில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் பேசப்பட்டது, சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு கூட இந்த வீதி பிரச்சினை விளக்கமளிக்கப்பட்டது. ஜனாதிபதிக்கு கூட இது தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் விமான நிலையத்துக்கு மாற்றும்போதே வீதியை திறக்கவில்லை பாதுகாப்பு பிரச்சினை என்ற காரணத்தை கூறினார்கள். இப்போதும் அதேபிரச்சினையை கூறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் நாம் அவர்களுக்கு போக்குவரத்துக்காக இந்த வீதியை கட்டாயம் திறந்துவிடவேண்டும் என கூறிக்கொண்டிருக்கின்றோம். பஸ் போக்குவரத்து, விமான நிலையத்துக்குமான இலகுவான வீதியாக உள்ளது.
நாளை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க யாழ்ப்பாணம் வரவுள்ளார் அவருக்கு இந்த பிரச்சினையை எடுத்துக்கூறவுள்ளேன் என்றார்.
செய்தி, படங்கள்: S.Nirujan