வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து மேலும் 700 ஏக்கர் நிலப் பரப்பு விரைவில் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை – பொன்னாலை வீதி, தமிழ் – சிங்களப் புத்தாண்டுடன் முழுமையாக விடுவிக்கப்படவுள்ளது.
வலி.வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இன்னமும் 4 ஆயிரம் ஏக்கர் வரையில் உள்ளது. அவற்றில் 550 தொடக்கம் 700 ஏக்கர் வரையிலான மக்கள் குடியிருப்பு மே மாதம் அளவில் விடுவிக்கப்படலாம் என்று தெரியவருகிறது.
இதேவேளை கடந்த பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி அரச தலைவர் யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக வந்தபோது போது, பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதி திறக்கப்பட்டது.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் மாத்திரமே அதனூடாகப் பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்தன. எதிர்வரும் தமிழ் – சிங்களப் புத்தாண்டுடன், அந்த வீதி முழுமையான போக்குவரத்துக்கு திறந்துவிடப்படவுள்ளது.
நன்றி: உதயன்.கொம்
புதுவருடத்தன்று நிகழவுள்ள மாற்றம்! யாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
அங்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலிகள், முகாம்கள் என்பவற்றை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என அறியமுடிகிறது. பலாலி, வறுத்தலைவிளான், கட்டுவன் சந்தி, அச்சுவேலி வீதி, கட்டுவன்- மயிலிட்டி வீதி அதனைச் சுற்றியுள்ள காணிகள், மயிலிட்டி துறைமுகத்துக்கு முன்னால் உள்ள காணிகள் என்பன விடுவிக்கப்படவுள்ளன.
இந்தக் காணிகள் எதிர்வரும் புத்தாண்டு தினத்தன்று மக்களிடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் பருத்தித்துறை பொன்னாலை வீதியும் முழுமையாக மக்களின் பாவனைக்குத் திறந்து விடப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி: தமிழ்வின்.கொம்