நன்றி: உதயன்.கொம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எங்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மறக்கக் கூடாது. வலி.வடக்கில் எஞ்சியுள்ள 5 ஆயிரத்து 500 ஏக்கரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். "வலி.வடக்கு மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு விடுவிக்குமாறு, 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி உணவு தவிர்ப்புக் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க வந்து கலந்து கொண்டார். அவரிடம் "1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி உங்களின் ஆட்சியில் தான் இந்த மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஏன் நீங்கள் எங்களை குடியமர்த்தவில்லை?' என்று அவரிடம் கேட்டோம். "எங்களுடைய அரசு அப்போது மாற்றப்பட்டதால் அதனை செய்ய முடியவில்லை. இன்னெரு ஆட்சி மாற்றம் வந்தால் கட்டாயம் மீள்குடியோற்றம் செய்வோம்' என்று அவர் கூறினார். தற்போது மக்கள் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றார்கள். எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் ரணில் விக்கிரமசிங்க முதல் கட்டமாக ஆயிரம் ஏக்கர் விடுவிப்பு செய்து ஆரம்பித்து வைத்திருக்கின்றார். அந்த வாக்குறுதியை மறவாது, தொடர்ந்து மிக வேகமாக மிகுதி 5 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தையும் விடுவித்து, முழு மக்களையும் குடியமர்த்த வேண்டும். மக்கள் கண்ணீருடன் வாழும் 25 வருட வாழ்க்கைக்கு முடிவுகட்டி, சொன்னதை நிறைவேற்றிக் காட்டும் அரசாக மக்களின் மனதில் நிலைத்து நிற்பீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.''‡ என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். நன்றி: உதயன்.கொம் இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments
Leave a Reply. |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|