
அங்கு நடந்த கலந்துரையாடலில் முக்கியமாக பருத்தித்துறை காங்கேசன்துறை இடையிலான போக்குவரத்திற்கான பாதை திறப்பு (அதாவது உயர் பாதுகாப்புப் பகுதியில் விடுவிக்கப்படாமலிருக்கும் பலாலி கிழக்கிலிருந்து மயிலிட்டிச் சந்திவரை இராணுவப் பாதுகாப்புடனான பேரூந்துப் போக்குவரத்து), மயிலிட்டித் துறைமுகப் புனரமைப்பு மற்றும் வீட்டுத் திட்டம் போன்றனவ்ற்றிற்கான பல விடயங்கள் பேசப்பட்டன.
மயிலிட்டி மீள் குடியேற்ற சங்கத் தலைவர் திரு.அ.குணபாலசிங்கம் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு சனிக்கிழமை பிற்பகல் மயிலிட்டி வேல்வீதியை அண்டிய பகுதியில் இடம்பெற்றது.
படங்கள்: திரு.அ.குணபாலசிங்கம்