வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரேயொரு காசநோய் வைத்தியசாலையாக குறித்த வைத்தியசாலையே விளங்கியது. இராணுவத்தினரின் ஆடம்பரப் பாவனை எவற்றுக்கும் குறித்த நிலத்தை சுவீகரிக்கும் திட்டம் இல்லாத காரணத்தினால் விரவில் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. குறித்த சந்திப்பில் இத்துடன் மேலும் பல விடயங்கள் ஆராயப்பட்டன.
மயிலிட்டித் துறைமுகப் பிரதேசம் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் அதனை அண்டிய பகுதிகள் விடுவிக்கப் படாதமையினால் அந்தப் பகுதி மீனவர்கள் அங்கு குடியமரவில்லை. இதனால் துறைமுகம் ஊடான மீன்பிடியை அபிவிருத்தி செய்யமுடியாமல் உள்ளது. இதற்கும் அப்பால் இந்தப் பகுதியைச் சேர்ந்த அதிக மீனவர்கள் இன்னும் பருத்தித்துறைப் பகுதியிலேயே வாழ்கின்றனர். பருத்தித்துறை பொன்னாலைப் பாதையின் ஊடாக அவர்களின் போக்குவரத்துக்கு அனுமதிப்பதாக படையினர் சம்மதம் தெரிவித்து இரு மாத காலம் கடந்துவிட்ட நிலையிலும் குறித்த பாதை திறக்க ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என படைத் தரப்பிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
இவற்றுக்குப் பதிலளிக்கும்போது போக்குவரத்துக்கான பணிகள் தற்போது இடம்பெறும் நிலையில் பணிகள் முடிவுற்றதும் வீதிப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் எனவும், முன்னர் பகல் நேரங்களில் மட்டும் அரச பேரூந்துகளே பயணிக்க முடியும் எனக் கூறப்பட்ட போதிலும் தற்போது சகல வாகனங்களும் எந்த நேரத்திலும் போக்குவரத்து செய்யும் நிலமை ஏற்படும் எனவும், இந்தப் பணியானது சுமார் 10 தினங்களுக்குள் நிறைவு பெறும் எனவும் படைத்தரப்பால் சுட்டிக்காட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது;.