ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன 6மாத காலத்திற்குள் தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வார் என நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், பலாலி விமான நிலையத்தினை விஸ்தரிப்புச் செய்வோம் என கூறியதன் பின்னர் ஜனாதிபதியின் வார்த்தையில் நம்பிக்கை இழந்துவிட்டோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 6 மாதத்திற்குள் வலிவடக்கில் மீள்குடியேற்றம் செய்து. வலிவடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்;வு தருவேன் என கூறினார். ஆனால், பலாலி விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமான புனரமைப்புச் செய்வதற்கு வலிவடக்கு மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுமென்றும், அதை யார் எதிர்த்தாலும், பலாலி விமான நிலையம் விஸ்தரிப்புச் செய்யப்படுமென்று பாதுகாப்பு அமைச்சர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் கருத்துக்கள் தம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக மக்கள் சுட்டிக் காட்டினார்கள்.
அத்தியவசிய பிரச்சினைகளான மலசல கூடங்கள் பாவிப்பதில் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை உட்பட இளம் பெண்களுக்கு திருமணம் செய்வதில் பிரச்சினை, சமூக கலாசார பிரச்சினைகளை எதிர்நோக்கும் தமக்கு உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்றும், தமது சொந்த இடத்திற்கு சென்று தாங்கள் ஏதாவது ஒரு தொழிலை செய்து நின்மதியான வாழ்க்கை வாழ்வோம் என்றும் தெரிவித்தனர்.
உங்கள் பிள்ளைகளை போன்று எங்கள் மீதும் கருணை கொண்டு, உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் மந்த போக்கே தமது மீள்குடியேற்ற தாமதத்திற்கு காரணம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனவே, இதுவரை காலமும், சுமார் 26 வருடங்களுக்கு மேலாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் தம்மை ஜனாதிபதிகருணை கொண்டு, தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்றும், அவ்வாறு எதிர்வரும் ஏப்பிரல் மாதம் புதுவருடத்திற்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்யத் நாங்களாகவே சென்று மீல்குடியமர்வோம், என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மீள்குடியேற்றம் செய்யும் வரை நலன்புரி நிலைய முகாம்களில் வாழும் வலி.வடக்கு மக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் மீள்குடியேற்றம் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்திருந்தார்.
ஜனாதிபதியின் உருதியளிப்பிற்கு இணங்க சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பிலான மகஜர் ஒன்றினையும் ஜனாதிபதிக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
நன்றி: வலம்புரி