
தென்பகுத்யில் சலாவ முகாம் குண்டுவெடிப்பு, கொழும்பில் குப்பைமேடு சரிவு, த்ற்போது வெள்ள அனர்த்தம் ஆகியவைகளால் மக்கள் பாதிக்கப் பட்டதும் அரசு ஒருசில நாட்களுக்குள் அவர்களுக்கு வீடுகள், நிதி உதவிகள் இன்னும் பல வசதிகள் செய்து குடியமர்த்திவிட்டது. தென்பகுதி மக்களுக்கு ஒருநீதி, வடக்கு கிழக்கு மக்களுக்கு ஒரு நீதியாக எதுவும் செய்யாமல் இழுத்தடித்து வருகின்றது. சாப்பாட்டுப் பந்தியில் பரிமாறுபவர் தனதாளாக இருந்துவிட்டால் அடிப்பந்தியில் இருந்தாலென்ன நுணிப்பந்தியில் இருந்தாலென்ன என்ற பழமொழிதான் வருகின்றது.
28 ஆவது வருடத்தை ஆரம்பிக்கும் மக்களுக்கு முந்தைய அரசுதான் எதுவும் செய்யவில்லை. எமது நல்லிணக்க அரசுகூட இந்த மக்களுக்கு உணவு நிவாரணம் கூட இதுவரை வழங்கவில்லை. எத்தனையோ வயதானவர்கள், பெண்கள் தலைமத்துவ குடும்பங்கள், ஊனமுற்றவர்கள் பசி பட்டினியால் வாடிக்கொண்டு இறப்பை எதிர்பார்த்து இறந்துகொண்டு இருக்கின்றார்கள்.
விடுபட்ட நிலங்களிலும் குடியேறும் மக்களுக்கு வீடுகட்ட வழங்கப்படும் 8 இலட்சம் ரூபா பணம் தற்போதைய விலைவாசியில் அரைவாசி வீடுதான் கட்டமுடியும். மீள்குடியேற்ற அமைச்சு தகர வீட்டுக்கு ஒதுக்கிய 22 இலட்ச ரூபாவில் மக்கள் கட்டும் சீமெந்து வீட்டுக்கு 14 இலட்சம் ரூபா வழங்க வேண்டும். பணம்கூடுதலாகக் கொடுத்தால்தான் மக்களால் வீடு கட்டி குடியமர முடியும்.
விடுபட்ட இடங்களிலும் மக்கள் குடியமர முடியாது தாமதிப்பதற்கு காரணங்கள் வீதிகள், நீர் வசதி, மலசலகூட வசதி. சுகாதார வசதி, மின் வசதி, பாடசாலைகள் என்பன போன்று பல அடிப்படைவசதிகள் இல்லாத்தால் மக்கள் பின் நிற்கின்றார்கள். அத்துடன் விடுபட்ட நிலங்களிலும் இராணுவம் வசதியான நிலங்களை வைத்துக்கொண்டு வசதிகள் அற்ற நிலங்களை பகுதி பகுதியாக விடுவிப்பதாலும் மக்கள் சிரமங்களை சந்திக்கிண்றார்கள்.
ஜனாதிபதியின் 6 மாத்கால அவகாசம் வருடங்கள் பலவாகியும் எதுவும் நிறைவேறவில்லை. அவர்மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றார்கள். மயிலிட்டி, பலாலி போன்ற இடங்கள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை அரசு எந்த முகாம்களை மூடிவிட முடியாது என்பதனைத் தெரிவித்துக் கொள்ளமுடியும்.
காலம் தாமதமாக மக்கள் போராட்டத்தில் குதிக்க ஆயத்தம் ஆகிக்கொண்டிருக்கின்றார்கள். எனவே மக்களின் மீள்குடியேற்றத்துக்கு விரைவாக இந்த நல்லாட்சி அரசு ஒரு முடிவைக் காணுங்கள்.
என வலி வடக்கு மீள்குடியேற்றப் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் அவர்கள் மேற்கண்டவாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.