குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
எந்தவொரு குடிமகனும் தனது சொந்த நிலத்தை யாரும் சுவீகரிப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள். அந்த வகையில் வலி வடக்கில் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள எமது மக்களின் காணிகளை எவரும் சுவீகரிக்க முடியாது.
பொதுமக்கள் தொடர்புடைய விடயங்களில் அரசோ அதிகாரிகளோ தன்னிச்சையாக முடிவை எடுக்க முடியாது. இது ஒரு பாரதூரமான விடயம் ஆகும்.
வலி வடக்கு காணி தொடர்பில் பொதுமக்களால் உச்ச நீதிமன்றத்தில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த நிலையில் காணிகளை சுவீகரிப்பதாக அரசு அறிவித்துள்ள விடயத்தை நாம் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த நடவடிக்கையினை உடனடியாக நிறுத்த வேண்டும் இது தொடருமானால் உச்ச நீதிமன்றில் அறி விக்கவுள்ளோம். அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக பிரதமருடனும் மீள் குடியேற்ற அமைச்சருடனும் இன்று பேசவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி: வலம்புரி