இடில் காங்கேசன் துறையிலிருந்து மயிலிட்டித் துறைமுகத்தை அண்டிய கிராமங்கள் வரை விடுவித்த படையினர் பிரதான வீதிக்கு வடக்காக உள்ள கடல் பிரதேசத்தை அண்டி முட்கம்பி வேலிகளை அமைத்துள்ளனர். இவ்வாறு முட்கம்பி அமைக்கப்பட்ட வீதியோரத்துக்கும் கடலுக்குமிடையே வெறும் 200 மீற்றர் இடைவெளி மட்டுமே உள்ளது.
இதனை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரம் மீன்பிடியாக உள்ள நிலையில் மீன்பிடிக்க முடியாது முட்கம்பி வேலிகளைப் போட்டுத் தடைசெய்த பின்பே எமது நிலங்களில் ஒரு பகுதியை விடுவித்துள்ளனர். இதனால் வாழ்வாதார அச்சம் காரணமாக மக்கள் சொந்த இடம் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
இவற்றினைக் கருத்தில் கொண்டு கடற்கரையையும் விடுவிப்பதற்கு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரும் ஆவன செய்யவேண்டும் – என்றார்.
- உதயன் நாளிதழ்