ஜனாதிபதியின் வாக்குறுதிக்கு அமைவாக ஆறு மாதத்திற்குள் வலி.வடக்கு மக்களை பூரணமாக மீள்குடியேற்றம் செய்யப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(திங்கட்கிழமை) கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு சங்கம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கண்டன பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யாழ்.நல்லூர் கந்தசுவாமி முன்றலில் கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபாட்டினை மேற்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இந்த கண்டன பேரணியை ஆரம்பித்து வைத்தார்.
‘இராணுவமே வெளியேறு’, ‘வலி.வடக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்’, ‘போர் முடிந்தும் எமக்கு விடிவில்லையா’, ‘ஐ.நாவிற்கு காட்டுவதற்காக ஓரிரு காணியினை விடுவித்து நாடகமாடாதே’ போன்ற கோஷங்களை எழுப்பியவாறும், தம்மை மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தியும் மக்கள் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது யாழிலுள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட காரியாலயத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு அனுப்பி வைக்குமாறு கோரி மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரிடமும் தமது மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்துமாறு மகஜர் கையளிக்கப்பட்டது.
இந்த கண்டன பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments
Leave a Reply. |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|