மேற்படி கருத்து தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் நேற்றய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், வலி, வடக்கு மக்களுக்கு அவர்களுடைய காணிகள் மிக அவசியமானவை. மாற்று காணிகளையோ, நஷ்டஈட்டையோ அவர்கள் விரும்பவில்லை என கூறியுள்ளார்.
வலி வடக்கு மக்கள் மீண்டும் மீண்டும் தங்கள் சொந்த காணிகளையே கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் உங்களுக்கு மாற்று காணிகள் வழங்குகிறோம், பெறுமதியான நஷ்டஈடுகளை வழங்குகிறோம் என கூறப்படுகின்றது.
உங்கள் அப்பா, அம்மாவை விட்டு வாருங்கள், நாங்கள் நல்ல அப்பா, அம்மாவைத் தருகிறோம். பணம் தருகிறோம். என யாரும் கேட்டால் போக முடியுமா? அப்படியேதான் வலி,வடக்கு மக்களுக்கும் அவர்களுடைய நிலங்கள் அவசியமானவை அவர்கள் அவர்களுடைய சொந்த நிலத்தையே கேட்கிறார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.
நன்றி: தமிழ்வின்.கொம்