கேள்விக்கு தொடர்ந்து பதிலளிக்கையில், ஜனாதிபதி தன்னாலான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றார். ஆனால் படையினர் மிகப்பெரும் தடையாக இருக்கின்றார்கள். குறிப்பாக மயிலிட்டி பகுதியை விடுவிக்க முடியாது என்பதற்கு அவர்கள் கூறிக்கொண்ட காரணம் அந்தப் பகுதியில் இருந்து புலிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்கள் என்பதே ஆகவே பொருத்தமற்ற காரணங்களையே, கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.
அவை ஒத்துக் கொள்ள கூடிய காரணங்கள் அல்ல. எனவே இந்த விடயத்தில் தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் படையினருடன் மற்றும் அது சார்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும். இந்த பேச்சுவார்த்தைகள் வலிகாமம் வடக்கு உள்ளிட்ட உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்களுடைய சமகால மற்றும் எதிர்கால பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதாக இருக்க வேண்டும்.
இந்த இடத்தில் ஜனாதிபதி மீது முழுமையாக குற்றச்சாட்டை சுமத்த நாங்கள் விரும்பவில்லை. ஜனாதிபதி தன்னால் முடிந்தளவு முயற்சிகளை எடுத்திருக்கின்றார் என்பதே உண்மையான விடயம். அதேவேளை 6 மாதங்களில் நடக்கும் என்றார்கள். நடக்கவில்லை. என மக்கள் மத்தியில் இருக்கும் உணர்வுகளையும் நாங்கள் புரிந்து கொள்ளவே வேண்டும். அந்த வகையில் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக மீண்டும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்தப் போவதாக கூறப்படுகின்றது அரசியல் தலைவர்களும் குறிப்பிடுகின்றார்கள்.
ஆகவே அவ்வாறாக மக்களுடைய மனோ நிலைகள் வெளிபடுத்தப்பட வேண்டிய தேவையும் இருக்கின்றது. அதனை நாங்கள் மறுப்பதற்கில்லை என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் 6 மாதங்களில் மீள்குடியேற்றத்தை நிறைவு செய்வேன் என ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழி மறக்கடிக்கப்பட்டுள்ளதா? ஆட்சியாளர்கள் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்த விடயத்தில் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
நன்றி: தமிழ்வின்.கொம்