
நன்றி: இலங்கை தமிழ் செய்தி
![]()
இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளா் செயத் ரா-அத் அல் ஹுசைனிற்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை ஆணையாளர் ஹுசைன் விஜயம் மேற்கொண்ட போது இவ்வாறு கடிதம் கையளிக்கப்பட்டது.
குறித்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள், யுத்த காலத்தில் இராணுவம் மற்றும் துணை இராணுவ குழுவினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் நேரடியாக சரணடைந்தவர்கள் தொடர்பில் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கம் காணாமல் போனவர்களை கண்டுபிடித்துதரும் என நம்பியிருந்த தமக்கு தேசிய பொங்கல் நிகழ்வில் காணாமல்போனவர்கள் தற்போது உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என கூறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்து வேதனை அளிப்பதாகவும் அதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறெனில் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். காணாமல் போனவர்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளார் என்றே தாம் நம்புகிறோம். காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு வெறும் கண்துடைப்பு. ஸ்ரீலங்கா அரசாங்கம் சரியான விசாரணையை மேற்கொண்டு தீர்வு பெற்றுத்தரப் போவதில்லை எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து பதில் அளிக்க வேண்டும் எனவும் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி: இலங்கை தமிழ் செய்தி
இந்தப் பக்கம்
0 Comments
Leave a Reply. |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
|
© 2011-23 ourmyliddy.com
|