1980ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நீர் வழங்கல் வசதியை மீண்டும் ஏற்படுத்தித் தர வேண்டும். அந்தப் பகுதியில் மயானங்களும் சீர் செய்யப்படவில்லை. அதேபோன்று மயிலிட்டி, காசநோய் மருத்துவமனை, கட்டடங்கள் என்பன அடியோடு அழிக்கப்பட்டுள்ளன. சிறிய 3 கட்டடங்களே தற்போதுள்ளன.
அவற்றில் தற்காலிகமாகவேனும் ஒரு கிராமிய மருத்துவமனையை இயங்க வைக்க வேண்டும். 6.5 சதுர கிலோமீற்றர் பரப்பைக் கொண்ட மயிலிட்டிக் கிராமத்தில் இதுவரை 80 ஏக்கர்களே விடுவிக்கப்பட் டுள்ளன.
விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் படை நிலைகள் இருப்பதால் மக்கள் மீள்குடியமர அஞ்சுகின்றனர். மயிலிட்டியில் 15 படகுகளில் கடற்றொழில் நடைபெறுகின்றபோதும் மீன்களைச் சந்தைப்படுத்த முடியாதுள்ளது. அதனால் படகுகளின் உரிமையாளர்கள் தொழில் செய்யத் தயங்குகின்றனர். பருத்தித்துறை – பொன்னாலை வீதியால் பயணிக்க அனுமதிப்பதன் ஊடாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றார்.