அதனடிப்படையில் குறித்த முன் மொழிவுக்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் பதிலளிக்குமாறு யாழ். மாவட்டச் செயலகத்துக்கு பாதுகாப்புத் தரப்பினரால் கடந்த மாதம் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. குறித்த கடிதத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மீனவ சங்கங்களின் கருத்துக்கள் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தினால் கேட்கப்பட்டிருந்தது.
தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இது தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. பலாலி, மயிலிட்டி, ஊறணி, காங்கேசன்துறை ஆகிய 4 மீனவ சங்கங்கள் மற்றும் வலி.வடக்கு மீள் குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கம் ஆகியன குறித்த கலந்துரையாட லில் பங்கெடுத்திருந்தன.
இதன்போது மயிலிட்டித்துறைமுகத்தை வளலாயில் அமைப்பது தொடர்பிலான அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு கலந்துரையாடலில் பங்கு கொண்ட தரப்பினர் அனைவரும் இணைந்து மறுப்புத் தெரிவித்துள்ளனர். மயிலிட்டித் துறைமுகம்தான் வேண்டும் என் றும் அதனை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு ஒரு போதும் ஆதரவளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். தமது மறுப்பை எழுத்து மூலமாகவும், தெல்லிப்பழைப் பிரதேச செயலருக்கு, கலந்துரையாடலில் பங்கு கொண்ட சங்கங்கள் வழங்கியுள் ளன.