அவ்வாறான தீர்மானத்தை பிரதமர் எடுக்கவில்லை. மேலும் அவ்வாறான வார்த்தை பிரயோகத்தையும் பிரதமர் செய்யவில்லை எனவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது மயிலிட்டி துறைமுகப் பகுதியை மக்களிடம் வழங்குவதற்கு பிரதமர் மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்த விடயம் தொடர்பாக பிரதமர் செயலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
மயிலிட்டி துறைமுகம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை பொருளாதார நோக்கில் மேம்படுத்த வேண்டும். அவற்றை பாதுகாப்பு கண்ணோட்டத்தில் பார்க்காமல், அபிவிருத்திக் கண்ணோட்டத்தில் பார்க்குமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
விரைவில் செயற்படுத்தப்படவுள்ள பிராந்தியங்களின் அபிவிருத்தி செயற்றிட்டத்தில் வடபிராந்தியத்தில் இந்த இரு துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்யவேண்டும்.
அதற்காக இந்த இரு துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்வது தொடர்பான மேம்பட்ட திட்டவரைபை தயாரிப்பதற்கு மாகாணத்திலுள்ள முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், படையினர் இணைந்து ஒரு சந்திப்பை மேற்கொண்டு குறித்த திட்டவரைபை தயாரிக்குமாறும் பிரதமர் தெரிவித்தார்.
மயிலிட்டி துறைமுகத்தின் தேவையையும் நிவர்த்திக்கும் வகையில் பருத்துறையில் ஒரு பாரிய துறைமுகம் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் அந்த துறைமுகம் அமைக்கும் பணியை தற்காலிகமாக பிற்போடுமாறும் பிரதமர் பணித்தார்.
மயிலிட்டி, காங்கேசன்துறை துறைமுகங்கள் தொடர்பாக மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றார்கள்? என்பதை அறிந்து கொண்டு அதற்கப்பால் எதுவானாலும் செய்யலாம் எனவும் இதன்போது பிரதமர் கூறினார்.
மக்கள் விரும்பும் அபிவிருத்தியை செய்ய வேண்டும். மக்கள் விரும்பாத அல்லது மக்களுக்கு பயன்படாத விடயங்களில் அபிவிருத்தியின் பெயரால் பணத்தை செலவிட முடியாது என்பதையே 15ம் திகதி நடை பெற்ற உயர்மட்ட குழு சந்திப்பில் பிரதமர் சுட்டிக்காட்டினார் எனவும் பிரதமர் செயலகம் மேலும் விளக்களித்துள்ளது.
நன்றி: தமிழ்வின்.கொம்