இதேவேளை எனைய காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும் எனவும் இராணுவத்தளபதி இன்று தெரிவித்தார்.
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 3 கிராம சேவையாளர் பிரிவில் 683 ஏக்கர் காணி விடுவிக்கும் நிகழ்வு மயிலிட்டி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள மைதானக் காணியில் இடம்பெற்றது.
மயிலிட்டி - கட்டுவன் வீதிக்கு மேற்குப் புறமாக இருக்கும் இதன்படி ஜே-240 தென்மயிலை, ஜே-246 தையிட்டி கிழக்கு, ஜே-247 தையிட்டி கிழக்கு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. இங்கு பற்றைகள் சூழ்ந்து வீடுகள் கோயில்கள் என உடைந்த நிலையில் காணிகளின் எல்லைகளை அடையாளம் காணமுடியாத நிலையில் காணப்படுகிறது.
இதேவேளை எனைய காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும் எனவும் இராணுவத்தளபதி இன்று தெரிவித்தார்.
இன்று விடுவிக்கப்பட்ட தமது சொந்த இடங்களை பார்வையிட மக்கள் வரும் நிலையில் பற்றைகள் சூழ்ந்துள்ள இடங்களில் உள்ள பழைய இரும்புகளை எடுத்து விற்பனை செய்பவர்களும் வர ஆரம்பித்துள்ளனர். பழைய ஊசிலி மிசின், கம்பி கேடர்கள், சேதமடைந்த ஏணி என்பற்றை எடுத்துச் செல்கின்றனர்.
0 Comments
Leave a Reply. |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|