மயிலிட்டி ஊடான கடற்கரை பாதை திறப்பு 28 வருடங்களின் பின் பொன்னாலை பருத்தித்துறை கடற்கரை வீதி இன்று 06/02/2018 காலை 8.45 மணியளவில் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது
எவ்வளவோ போராட்டங்கள், காத்திருப்புக்கள், தவிப்புக்கள், அலைச்சல்கள் என இன்னும்பல துயர்களைக் கடந்து விடுவிக்கப்பட்டது. விடுதலை பெற்றது மயிலிட்டி வீதி என்றுதான் சொல்லவேண்டும்.