
![]()
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் திரு. சுவாமிநாதன் அவர்கள் மீள்குடியேற்றப்பட்ட, மற்றும் குடியேற இருக்கும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு 19/07/2017 புதன்கிழமை ஆலயத்தில் விசேட பூசையுடன் நடைபெற்றது. மக்களுக்கு மீன்பிடி வலைகளும். மீன்பிடி சங்கத்திற்கு ஐந்து படகுகளும், ஐந்து வெளி இணைப்பு இயந்திரமும் அவற்றில் ஒரு படகும் இயந்திரமும் இன்று கையளிக்கப்பட்டது.
அத்துடன் ஆலயங்களை மீள் நிர்மாணம் செய்வதற்கு நிதியுதவி வழங்குவதாகவும் அமைச்சர் கூறினார். அத்துடன் பருத்தித்துறை பொன்னாலை வீதியையும் மக்கள் பாவனைக்காகத் திறப்பதற்கும், மயிலிட்டியின் விடுவிக்கப்படாத் மிகுதி நிலத்தை விடுவிப்பதற்கும் தான் முயற்சி செய்வதாகவும் அமைச்சர் சுவாமிநாதன் மேற்படி நிகழ்வில் கூறினார்.
படங்கள்: திரு. அ.குணபாலசிங்கம்
இந்தப் பக்கம்
|
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
ALL
Archives
February 2025
|