மீள்குடியேற்றம் சமாதானத்திற்கும், பொருளாதார அபிவிருத்திக்கும் அடிப்படையானது. தமிழ் வின்
வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பலாலி கிழக்கு பல நோக்கு கூட்டுறவுக் கட்டடத் தொகுதியினை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மீள்குடியேற்ற பகுதிகளில் வாழ்வாதாரம், உட்கட்டுமானம் உட்பட பிற துறைகளில் முன்னேற்றத்தினைப் பார்க்கக்கூடியதாக உள்ளது.
நான் கடந்த முறை தெல்லிப்பளை வந்த போது பார்த்தவற்றுடன் தற்போது ஒப்பிடுகையில், நிறைய மாற்றங்களைக் காண்கின்றேன்.
உங்களுக்குள் ஒருங்கிணைந்து முன்னேறுகின்றீர்கள். இவை பயனுள்ள திசைவழி. மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு மீள்வது முக்கியமானது. இதனாலேயே அந்தநாள் தொட்டு நோர்வே அரசாங்கம் மீள்குடியேறிய மக்களுக்கான வாழ்வாதார உதவிகளையும், மீள்குடியேற்றத்தினை வசதிப்படுத்தும் உதவிகளையும் செய்து வருகின்றோம்.
2015ஆம் ஆண்டு மீள்குயேற்றம் செய்ய ஆரம்பிக்கப்பட்ட போது, நோர்வே அரசாங்கம் 300 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை உதவியாக வழங்கியது.
குறிப்பாக, நோர்வேயின் உதவியானது பெண்களை நோக்காகக்கொண்டே வழங்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமானது மாவட்ட மற்றும் பிரதேச அரசாங்க அலுவலர்களுடன் முன்னெடுக்கப்படும். இப்பணியானது நின்று நிலைக்கக்கூடியதாக அமைய வேண்டுமென்பதே பிரதான நோக்கமாகும்.
நீங்கள் உங்கள் சொந்த இடத்திற்கு திரும்பியது மீளிணக்கத்தின் முக்கியமான அடையாளமாகும். போருக்குப் பிந்தைய சூழலில் வாழ்வாதாரத்தினைக் கட்டி எழுப்புவது, சமாதானத்தினைக் கட்டி எழுப்புவதற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் அடிப்படையானதாகும்.
போருக்குப் பிந்திய நிலமைகளில் இயற்கையான வளங்களை மையப்படுத்திய வாழ்வாதாரத்தினைக் கட்டியெழுப்புவதானது உணவுப் பாதுகாப்பு, தொழில்வாண்மை, போன்றவற்றிற்கு முக்கியமானதாகும்.
நோர்வே அரசாங்கம் இலங்கையில் நீண்டகாலமாக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நோர்வே இலங்கையின் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்வதற்கும் வினைத்திறனுள்ளதாக மாற்றுவதற்குமான உதவிகளைச் செய்து வருகின்றது.
தேசிய மீன்பிடிக் கொள்கையினை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப உதவிகளையும் இலங்கையின் மீன்பிடி வளங்களைக் கணக்கெடுப்பதற்கான உதவிகளையும் நோர்வே அரசாங்கம் செய்து வருகின்றது.
இவை இலங்கையின் மீன்பிடித் துறையினை நின்று நிலைக்கக்கூடியதாக மாற்றும் நோக்கில் செய்யப்படும் உதவிகளாகும் என குறிப்பிட்டுள்ளார்.