இந்நிலையில் அங்கு தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வரும் மக்கள் பெற்றோலுக்கு மல்லாகம் வரை சென்றே பெற்றுக்கொள்ளக் கூடிய நிலையிருந்ததுடன் இங்கு பெற்றோலினை வாங்கி உள் கடைகளில் கூடிய விலைக்கே விற்கப்பட்டுகிறது..
இந்த எரிபொருள் நிலைய புனரமைப்பு குறித்து தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் உமாகரன் கருத்து தெரிவிக்கையில் பெற்றோலிய அமைச்சர் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினை புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தோம் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துடன் விரைவில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் இதன்படி அனுமதிகள் கிடைக்கப்பட்பெற்று புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துள்ளன. 4 மாதங்களில் இதனை புனரமைத்து தருவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி டீசல், பெற்றோல், மண்ணெண்ணை ஆகியவற்றுக்கான எரிபொருள் தாங்கிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன இது புனரமைக்கப்பட்ட பின்னர் வாகனச் சாரதிகள், மயிலிட்டி மீன்பிடி தொழிலாளர்கள், மீள்குடியேறிய மக்களுக்கு டீசல், மண்ணெண்ணை, பெற்றோல் ஆகியன விநியோகிக்கப்படும். இதனால் மக்களுக்கு சிரமமின்றி அமையும் என்றார்.
செய்தி: நிருஜன் செல்வநாயகம்