இதேபோன்று கட்டுவன் மயிலிட்டி வீதியில் உள்ள வீரபத்திரர் கோயிலுக்கு அண்மையில் உள்ள உள்ளக வீதியான பைந்தாவைத்தை வீதி (810 மீற்றர்) வெள்ள வாய்க்கால் வீதியின் புனரமைப்பு பணிகள் அடுத்த வாரமளவில் கொங்கிறீட் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இது வறுத்தலை பிள்ளையார் கோயில் வரையும் புனரமைக்கப்படவுள்ளது. கடந்த மாதமளவில் இவ்வீதி பற்றைகள் வெட்டி அகற்றும் பணிகள் இடம்பெற்றது.
இதேவேளை கட்டுவன் சந்தியிலிருந்து மயிலிட்டி வரையான வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வீதியையும் மழை காலத்திற்கு முன்னராக புனரமைக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குரிய சங்கானைச் சந்தி முதல் மல்லாகம் சந்தி வரையான வீதி மற்றும் மல்லாகம் சந்தி முதல் கட்டுவன் சந்தி, கட்டுவன் சந்தி மயிலிட்டிச் சந்தி வரையான பிரதான வீதிகள் காபெற் வீதிகளாக புனரமைக்கப்படவுள்ளன.
இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
|
செய்தி, படங்கள்: செ. நிருஜன் |