பாஸ்கரன் பிரியங்கா. -158
முத்துலிங்கம் சங்கவி. -121
நவரத்தினம் சுகந்தன். -100
யாழ் மாவட்டத்திற்கான புலமைப்பரிசில் தகுதி நிர்ணய புள்ளியாக 160 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சாந்தகுமார் மதுஷாந்த அவர்கள் 170 புள்ளிகளைப் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளார்.
இம் மாணவன் கல்வி பயின்ற யா/நடேஸ்வராக் கல்லூரியில் இவருடன் சேர்த்து 18 மாணவர்கள் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி இருந்தனர். அவர்களில் 160 புள்ளிகளுக்கு மேலதிகமாக பெற்று சாந்தகுமார் மதுஷாந்த் மட்டுமே புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரே ஒரு மாணவர் ஆவார்.
மேலும் 2017ம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் யா/நடேஸ்வராக் கல்லூரியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த முதலாவது மாணவன் என்ற பெருமையினையும் இம் மாணவன் தனதாக்கிக் கொண்டுள்ளார்.
இவ்வாறு பல பெருமைகளை பெற்றுக்கொடுத்த மாணவ செல்வங்களுக்கு கல்வியினைக் கற்பித்துக் கொடுத்த எமது கல்வி நிலைய புலமைப்பரிசில் ஆசிரியர் ஜானு அவர்களுக்கும், கல்வி நிலையத்தை சிறப்பாக வழிநடத்திக்கொண்டிருக்கும் நிர்வாகத்தினருக்கும், மாணவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும், நமது கல்வி நிலையத்தை திறம்பட செயல்படுத்த நிதிஉதவி மற்றும் ஏனைய பெறுமதிமிக்க ஆலோசனைகளை வழங்கி கொண்டிருக்கும் புலம்பெயர் உறவுகள் மற்றும் உள்ளூர் உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகளை நிர்வாகம் சார்பில் தெரிவித்துக் கொள்வதுடன்,
எமது கல்வி நிலையத்தையும் தமது ஊரினையும் தாம் பயின்ற பாடசாலையினையும் தமது பெற்றோர்களையும் பெருமைப்படுத்திய மழலைச் செல்வங்களை மேலும் எமது ஊருக்கு பெருமையினையும் புகழையும் பெற்றுத்தர நாம் அனைவரும் வாழ்த்தி ஊக்குவிப்பு வழங்குவோம்.
•••நன்றி••
நிர்வாகம்
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்.