வலி.வடக்கு மக்களைச் சொந்த நிலத்தில் குடியமர்த்திய பின்னரே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
போர்கால இழப்பீடுகள் தொடர்பான கணக்கெடுப்பு நடவடிக்கைகளை அரசு நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், தற்போது மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு நடவடிக்கை வலி. வடக்கின் இந்த 24 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் குணபாலசிங்கம் தெரிவித்ததாவது:
முதன்முதலில் வெளியேற்றப்பட்டவர்கள் நாங்கள். முழுமையான தொழில் இழப்பையும், சொத்திழப்பையும் இன்னமும் சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள். எங்கள் வீடு வாசல்கள் உள்ளனவா? இல்லையா? என்பது தெரியவில்லை.
எங்களைச் சொந்த நிலங்களுக்கு விடுங்கள். இதன் பின்னர் கணக்கெடுப்பை நடத்துங்கள். நிவாரணம் தாருங்கள்.
சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகக் கணக்கெடுப்பு நடத்துவதாக நாடகமாட வேண்டாம். உண்மையான கணக்கெடுப்பு நடத்துவதாக இருந்தால் இனியும் தாமதிக்காமல் எங்களைக் குடியமர்த்தி விட்டுக் கணக்கெடுப்பை மேற்கொள்ளுங்கள்" என்றார்.
நன்றி: உதயன்.கொம்