அவற்றின் விடுவிப்பு தொடர்பிலும், உயர் பாதுகாப்பு வலயத்தில் இன்னும் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பொது மக்களின் தனியார் காணிகளின் விடுவிப்பு தொடர்பிலும் பாதுகாப்புத் தரப்பினரிடம் கேட்டறிந்தார்.
மயிலிட்டிக்கரை வடக்கு பிரதேசத்தையும், துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளையும் பார்வையிட்டார்.
இதன்போது மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம், மயிலிட்டி திருப்பூர் இளைஞர் ஒன்றியத் தலைவர் ஐ.உருத்திரமூர்த்தி மற்றும் பொதுமக்களுடனும் ஆளுநர் கலந்துரையாடினார்.
செய்தி: jvp news