அண்மையில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்திலுள்ள ஊறணி கனிஷ்ட வித்தியாலயம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக இன்று இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது. இன்று காலை பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களால் யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) சு. முரளிதரன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது
கடந்த 27 வருடங்களாக இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டிலிருந்த ஊறணிப் பிரதேசம் தற்பொழுதே படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் 1/4 வீதமான மக்களின் காணிகள், மற்றும் புனித அந்தோனியார் ஆலயத்தின் ஒரு பகுதிக் காணியும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. சுமார் 99 வீதமான பொது மக்களின் வீடுகள் மற்றும் மிகப் பெரிய புனித அந்தோனியார் ஆலயம், வாசக சாலை, முன்பள்ளி, கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம் யாவும் மண்ணோடு மண்ணாக அழிக்கப்பட்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments
Leave a Reply. |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|