இக் கலந்துரையாடலில் பகிரப்பட்ட கருத்துக்களின் படி இதுவரையில் மீள்குடியேற்றம் செய்யப்படாத மயிலிட்டி, தையிட்டி, ஊறணி, காங்கேசன்துறை, பலாலி போன்ற பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து முகாங்களில் வழும் மக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டு குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டது.
இக் குழுவில் அனைத்து முகாங்களில் இருந்தும் ஒவ்வொரு அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்று கூடி தீர்க்கமான முடிவு ஒன்றினை எடுத்து போராட்டத்திற்கான நாளினை அறிவிக்கும்.
இப் போராட்டத்திற்கான வேலைத்திட்டங்களை அந்தந்த முகாங்களில் உள்ள குழு உறுப்பினர்கள் முன்னெடுப்பார்கள் என்றும் எதிர்வரும் வாரத்திற்குள் குறித்த குழு ஒன்று கூட போராட்டத் திகதியினை அறிவிக்கும்.
இதன்படி நடைபெறும் போராட்டமானது எவரும் எதிர்பார்த்திராத வகையில் அனைத்து மக்களையும், பொது அமைப்புக்களையும், அரசியல் வாதிகளையும் உள்ளடக்கி மாபெரும் போராட்டமாக முன்னெடுக்கப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
மேற்படிக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணின் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோரும் போராட்டத்திற்கான ஆதரவினை தெரிவித்திருந்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகாண சபை உறுப்பினர் அனந்திர சகிதரன், வலி.வடக்க மீள்குடியேம் மற்றும் புனர்வாழ்வுக் குழுவினர் உள்ளிட்ட பலரும் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: தமிழ்வின்.கொம்