இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யா/வடக்கு இந்து ஆரம்ப பாடசாலையில் பயிலும் எமது மயிலிட்டி மண்ணின் மகள் வெள்ளிமயில் நிவேதா 171 மதிப்பெண்ணை பெற்று மாவட்ட ரீதியில் 651வது இடத்தினையும் பாடசாலை ரீதியில் மிகச்சிறந்த பெறுபேற்றினை வெளிப்படுத்தி பாடசாலைக்கும் எமது மயிலிட்டி மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார். மயிலிட்டிக்குப் பெருமை சேர்த்த வெள்ளிமயில் நிவேதா அவர்களின் கல்விப் பயணம் மேலும் மேலும் சிறக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.