
பலாக்காய் பொரியல் செய்து பொதிசெய்வதற்கான மூலப்பொருட்களையும் அவர்களுக்கான வேதனத்தினையும் திரு.கணேஸ்வரன் வேலாயுதம் அவர்கள் வழங்கி வைத்துள்ளார். இதிலிருந்து கிடைக்கும் இலாபத்தில் ஒருபகுதி அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் மிகுதி இலாபதொகை தொடர்ச்சியான உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறாக பெறப்படும் இலாப தொகை மீள்சுழற்சி முறையில் அவர்களின் உற்பத்தி முயற்சிக்கு பயன்படுத்தப்படும். தொடர்ச்சியான உற்பத்திகள் மூலம் அவர்கள் பொருளாதாரத்தினை உயர்த்தி கொள்ள முடியும். கிராமமட்ட பொருளாதார அபிவிருத்திக்கான தொழில் முயற்சிகளை தொடர்ந்தும் மக்கள் முன்னேற்றக் கூட்டணி செயற்படுத்தவுள்ளது.
நன்றி:
நமது செய்தியாளர்
க.வீரசிவகரன்